தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சோதிக்காதடா சோதிக்காத’; சிங்கிள்களின் சாபத்தை வாங்கி கட்டிக் கொள்ளும் ஜிவி பி! - பேச்சிலர் ஃபர்ஸ்ட் லுக்

ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் ’பேச்சிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

gvp

By

Published : Sep 12, 2019, 7:05 AM IST

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகத் திரைத்துறையில் அறிமுகமானார். இவர், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மருமகன் என்றாலும், தனக்குரிய பாணியில் இசையில் கலக்கித் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மயக்கம் என்ன படத்தில் இவர் போட்ட ’பிறை தேடும் இரவினில்’ பாடல்தான் ஜிவிபியின் சிறந்த இசைக்கு உதாரணம்.

சித்தார்த்துடன் ஜிவி பிரகாஷ் குமார்

இதேபோல், ஆயிரத்தில் ஒருவன், தாண்டவம், மதராசபட்டிணம் போன்ற படங்களிலும் ஆல்பம் ஹிட் கொடுத்தார். இருப்பினும், டார்லிங் படம் மூலம் நடிகராக புது அவதாரமெடுத்து வெற்றியும் பெற்றார். அதன்பின் வந்த அடல்ட் காமெடி படமான ’திரிஷா இல்லைனா நயன் தாரா’ படமும் ஹிட்டானதால் ஜிவிபி வீட்டு வாசல் முன் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சாரை சாரையாக குவிந்தனர்.

ஜிவி பிரகாஷ் குமார்

இடையில் வந்த சில படங்கள் சொதப்பினாலும், நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில், சித்தார்த்துடன் இவர் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் பைக் ரேசராக கலக்கியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுபோக, ஜிவிபி கைவசம் எட்டு படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் நடித்த ‘பேச்சுலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை(first look) இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டு, படம் வெற்றியடைய வாழ்த்து கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் ட்வீட்

ஹர்பஜன் ட்வீட்டை ஜிவிபி ரீட்வீட் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “ அவள் என் அறைக்கு வரும்போது, காதலின் கடவுள் வருகிறாள் என என் உள்ளுக்குள்ளே கூறிக் கொள்வேன்”, என்று எழுதி பேச்சிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பதிவிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார்

ABOUT THE AUTHOR

...view details