தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பில் பிஸியான பின்பு மற்றவர் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துவிட்டார். தற்போது மீண்டும் அவரது இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ‘இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூரரைப் போற்று’, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஆகிய இரு படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த இரு படங்களின் இசையமைப்புப் பணி குறித்து அவர் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
சூர்யா, தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் - தனுஷ்
'சூரரைப் போற்று', 'அசுரன்' ஆகிய இரு படங்கள் குறித்தும் ஜி.வி.பிரகாஷ் ஒரே நேரத்தில் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
surya dhanush
’சூரரைப் போற்று’ படத்துக்காக அழகிய வரிகளை தந்த கவிஞர் ஸ்நேகனுக்கு நன்றி, ரவுடி பேபி பாடிய தீ, இந்தப் பாடலை பாட இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ‘அசுரன்’ படத்தின் ஐந்தாவது பாடலுக்கான டியூன் கம்போசிங் போய்க்கொண்டிருக்கிறது. புதிய பாடகர் யாரையாவது பாடவைக்கலாம் என இருக்கிறேன் என்று ஜிவி பதிவு செய்திருக்கிறார். இதனால் தனுஷ், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.