அசெஸ் பிலிம் பேக்டரி வழங்கும் ஜி.வி. பிரகாஷ் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாளை வெளியிடவுள்ளார். இதுகுறித்து ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் புலவர் பராக்!! பராக்!!, ட்விட்டர் உலக டான், சென்னை ஐபிஎல் டீமோட செல்லப் பிள்ளை ஹர்பஜன் சிங், எங்க படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்றது பெருமை. எங்கள் அழைப்பை ஏற்றதற்கு நன்றியும் அன்பும் ஹர்பஜன் சிங்... #AFF7FirstLookTomorrow எனப் பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஜி.வி.பிரகாஷ்! - ஜிவி பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடவுள்ளார்.
harbhajan
ஜி.வி. பிரகாஷ் பதிவில் உள்ள போஸ்டரில், பத்மஸ்ரீ ஹர்பஜன் சிங் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கலாய்ப்பதற்காக செய்தார்களா என தெரியவில்லை. ஆனால் ஹர்பஜன் சிங் பத்மஸ்ரீ விருது வாங்கியதில்லை.
ஹர்பஜன் சிங் என்ற மலையேற்ற வீரர் ஒருவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அதனால் குழப்பத்தில் கூட படக்குழுவினர் இப்படி பதிவு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. அப்படி செய்திருந்தால், இது நம்ம ஹர்பஜன் இல்லங்க, வேற ஹர்பஜன்னு யாராவது கூப்பிட்டு சொன்னால்தான் உண்டு.