தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி. பிரகாஷ். இவர் 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சைந்தவி முதல் முறையாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். குழந்தைக்கு அன்வி (Anvi) என பெயர் வைத்துள்ளனர்.
குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
சென்னை: ஜிவி பிரகாஷ் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்
தற்போது முதல்முறையாக ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலே சமூக வலைதள பக்கங்களை கலக்கி வருகிறது.