இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினியின் அந்தப் பட தலைப்பில் நடிக்கும் ஜீவி பிரகாஷ் - ஜீவி பிரகாஷ்
ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திற்கு ரஜினி படத் தலைப்பு வைவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
File pic
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு 'ஆயிரம் ஜென்மங்கள்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.