தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனுஷூக்கு ரெடியான 2 பாடல்கள்... ட்யூனுடன் சஸ்பென்ஸ் வைத்த ஜி.வி. பிரகாஷ் - தனுஷ் படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட்

தனுஷ் படத்துக்கு இரண்டு பாடல்களின் ட்யூன்களை உறுதிசெய்துவிட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், அதன் பாடலாசிரியர் யார் என்பது குறித்து ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

D43
GV Prakash kumar update on #D43 movie

By

Published : Mar 7, 2020, 11:45 PM IST

சென்னை: தனுஷ் நடிக்கும் 43ஆவது படத்தின் பாடல்கள் குறித்து அப்டேட் செய்துள்ளார், அதன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது கர்ணன் படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமான புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இதேபோல் துருவங்கள் பதினாறு, மாஃபியா படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இது தனுஷின் 43ஆவது படமாக இருப்பதால் டி43 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டி43 குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ”டி43 படத்துக்காக 2 ட்யூன்கள் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பாடல்களை ஒரு அற்புதமான நபர் எழுத இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது யார் தனுஷுக்கு பாடல் எழுதப்போகிறார்கள் என்று தனுஷின் ரசிகர்கள் தங்களது அறிவுக்கு எட்டியவாறு யோசித்து பல்வேறு பாடலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details