தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தம்பி ஜி.வி.பிரகாஷூக்கு விருதுகள் உண்டு’ - இயக்குநர் சீனு ராமசாமி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'இடிமுழக்கம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

seenu
seenu

By

Published : Aug 28, 2021, 2:17 PM IST

விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படத்தை இயக்கி முடித்த சீனு ராமசாமி, அடுத்ததாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து 'இடி முழக்கம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். வைரமுத்து பாடல் எழுத ரகுநந்தன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், புதுச்சேரி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "'இடிமுழக்கம்' முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு தம்பி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வினித் ஸ்ரீனிவாசனின் படைப்புகள் மீது மரியாதை கொண்டுள்ளேன் - இயக்குநர் சீனு ராமசாமி

ABOUT THE AUTHOR

...view details