சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் 'பூம் பூம்' மாட்டுடன் வரும் நபர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ வைரலானது. இதைப்பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இவரைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், என் படத்தில் அவருக்கு வாய்ப்புத் தருகிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
'பூம் பூம்' மாட்டுக்காரரின் திறமைக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பூம்பூம் மாட்டுக்காரரின் திறமையைப் பார்த்து, தனது படத்தில் அவருக்கு வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
ஜி. வி. பிரகாஷ்
இதனைக் கண்ட ரசிகர் ஒருவர், அந்த பூம்பூம் மாட்டுக்காரரின் பெயர் மற்றும் போன் நம்பரை ட்விட்டரில் பதிவிட்டு ஜி.வி. பிரகாஷை டேக் செய்தார்.
இதைக்கண்ட ஜி.வி.பிரகாஷ், "எங்கள் குழு அவரைத்தொடர்பு கொண்டு, மிக விரைவில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளோம். மிக்க நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.