தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
இயக்குநர் ரிக்கி பர்செல் இயக்கியுள்ள 'ட்ராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்தில் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் எவ்ரிதிங் (Kingdom Over Everything - KOE) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப்படத்தில், டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன் மற்றும் பிக் மாமா ஹவுஸ் போன்ற பிரபல ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் நடித்துள்ளார்.