தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வாடிவாசல்' இசை தனித்துவமாக இருக்கும் - அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்! - ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கான இசையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

surya
surya

By

Published : Apr 14, 2020, 7:38 PM IST

சூர்யா 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்கவுள்ளார். சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் அமையவுள்ள 'வாடிவாசல்' படத்தைக் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் 75 ஆவது படமாக வாடிவாசல் வெளியாகவுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, தற்போது அனைத்துப் படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரடங்கால் தயாரான படத்தின் வெளியீடுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஜி.வி பிரகாஷ் சித்திரைத் திருநாளான இன்று (ஏப்.14) ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் 'வாடிவாசல்' குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், "ஜி.வி 75 ஸ்பெஷலாக இருக்கும்.

சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. எனக்குப் பிடித்தமான வெற்றிமாறன், சூர்யா, தி.வி கிரியேஷன்ஸ் கூட்டணிக்கான இசை தனித்துவமாக இருக்கும்" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: வாடிவாசல் பட அப்டேட்: காளை மீது ரிவஞ்ச் எடுக்கும் சூர்யா?

ABOUT THE AUTHOR

...view details