தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜோக்கர் நடிகரின் 'டாப்லெஸ்' வெப் சீரிஸ் - டீஸர் வெளியீடு - குரு சோமசுந்தரம் நடிக்கும் டாப்லெஸ்

'ஜோக்கர்' பட நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'டாப்லெஸ்' வெப் சீரிஸின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

topless
topless

By

Published : Jan 22, 2020, 7:52 AM IST

'ஆரண்ய காண்டம்' திரைப்படம் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். 'கடல்', 'பாண்டியநாடு', 'ஜிகர்தண்டா', 'ஜோக்கர்', 'வஞ்சகர் உலகம்', 'பேட்ட' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், 'ஜோக்கர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சமூக அவலங்களை மக்களுக்கு, சாட்டையடி கொடுக்கும் வண்ணம் இவரது நடிப்பு 'ஜோக்கர்' படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

இதனிடையே தற்போது இவர், 'டாப்லெஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தினேஷ் மோகன் இயக்கும் இந்த வெப் சீரிஸை சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், ஹரீஷ் உத்தமன், அருண் அலெக்சாண்டர், கோகுல் ஆனந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொள்ளைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த வெப் சீரிஸ், ZEE5 வலை தளத்தில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.


ஏற்கெனவே இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஒரு நிமிட டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீஸரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் சோம சுந்தரம் ஒருவரை கடுமையாகத் தாக்குவது, அரசியல் வசனம் பேசுவது உள்ளிட்ட கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் அதகளமான காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க...

தெலுங்கில் 'நாரப்பா'வான 'அசுரன்' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details