சாம் ஆண்டன் இயக்கத்தில் நகைச்சுவை, த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் 'கூர்கா'. யோகிபாபு, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மனோபாலா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரை யூ ட்யூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நிகழ்கால அரசியலை கேலி செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது என்பது இந்தப் படத்தின் டீசர் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
டீசர் வெளியாகி சுமார் இரண்டு மணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும், தற்போது யூ ட்யூபில் இதுதான் நம்பர் 2.