திரைத்துறையைப் பொறுத்தவரை மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. இந்த விருதுகளில் சிறந்த அயல்நாட்டு பட பிரிவில் ஹாலிவுட் தவிர மற்ற நாடுகளின் படங்கள் போட்டியிடும். இதிலிருந்து சிறந்த படம் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 92ஆவது ஆஸ்கர் விருது விழாவில் 2019ஆம் ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்த பரிந்துரைப் பட்டியலில் தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்', 'வடசென்னை', 'ஒத்த செருப்பு சைஸ் 7' உள்ளிட்ட 28 படங்கள் ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கான பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் இந்தியில் கல்லி பாய், ஆர்டிக்கிள் 15, கேசரி, உரி: த சர்ஜிகல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இறுதியாக இதில் இந்தியா சார்பில் சோயா அக்தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவான 'கல்லி பாய்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 92ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் விருதுக்கு உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலிருந்து மொத்தம் 93 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட்டிருந்தன.தற்போது அகாடமி அமைப்பு சிறந்த அயல்நாட்டு பிரிவுக்கான பத்து படங்களை அறிவித்துள்ளது. இதில் 'கல்லி பாய்' படம் இடம் பெறவில்லை. இதனால் இந்தாண்டும் இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் வெறும் கனவாகவே அமைந்ததுள்ளது.
இதையும் வாசிங்க: யாரும் பிரமிச்சு போகும் ஃபிரீக் பெண் நூரின் ஷெரீப் கலக்கல் போட்டோ!