தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கார் விருதுக்கு இந்தியா பரிந்துரைத்த இந்தி திரைப்படம்... 'கல்லிபாய்' - ரன்வீர் சிங்

ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பாலிவுட் படமான 'கல்லிபாய்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

gullyboy

By

Published : Sep 21, 2019, 9:07 PM IST

திரைத்துறையைப் பொறுத்தவரை மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. இந்த விருதுகளில் சிறந்த அயல்நாட்டு படப் பிரிவில் ஹாலிவுட் தவிர மற்ற நாடுகளின் படங்கள் போட்டியிடும். இதிலிருந்து சிறந்த படம் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

இந்த நிலையில், ஆண்டுதோறும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 92ஆவது ஆஸ்கர் விருது விழாவில் 2019ஆம் ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதும் வெளியான பல்வேறு மொழி படங்களிலிருந்தும் தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்', 'வடசென்னை', 'ஒத்த செருப்பு சைஸ் 7' உள்ளிட்ட 28 படங்கள் ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கான பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தன.

தற்போது பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஆலியா பட் நடிப்பில் சோயா அக்தர் இயக்கிய 'கல்லிபாய்' திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details