அமிதாப் பச்சனின் ‘பிக்கு’ (Piku), ஆயுஷ்மான் குரானாவின் ‘விக்கி டோனர்’ (vicky donor) ஆகிய படங்களை இயக்கிய சுஜித் சிர்கார், தற்போது அவர்கள் இருவரையும் வைத்து ‘குலாபோ சிட்டபோ’ (Gulabo Sitabo) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அமிதாப் பச்சன் - ஆயுஷ்மானின் புதிய படம் வெளியாகும் தேதி அறிவிப்பு! - அமிதாப் பச்சன்
சுஜித் சிர்கார் இயக்கத்தில் அமிதாப் - ஆயுஷ்மான் இணைந்து கலக்கும் ‘குலாபோ சிட்டபோ’ (Gulabo Sitabo) வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூஹி சதுர்வேதி எழுதிய இதன் கதை, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குலாபோ, சிட்டபோ ஆகிய இருவரின் வாழ்க்கைப் பயணத்தை நகைச்சுவை ததும்ப சித்திரிக்கும் கதையாகும். முன்னணி கதாபாத்திரங்களில் அமிதாப், ஆயுஷ்மான் நடித்துள்ளனர்.
அமிதாப் இதில் பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுஜித் - அமிதாப் கூட்டணி என்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.