நடிகை கௌதமி சமூக அக்கறையோடு குழந்தைகளின் கல்விக்காகவும், மருத்துவம், புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விழிப்புணர்வு செயல்பாடுகளை 'லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன்' (LIFE AGAIN FOUNDATION) அமைப்புடன் செய்து வருகிறார்.
யூ ட்யூப்பில் சேனல் தொடங்கும் நடிகை கௌதமி! - யூடியூப்
நடிகை கௌதமி அன்னையர் தினத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
File pic
இந்நிலையில் 'லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன்' அமைப்பிற்காக கௌதமி யூ ட்யூப்பில் சேனல் ஒன்றை அன்னையர் தினமான மே 12ஆம் தேதி தொடங்க இருக்கிறார். சேனலின் முதல் நிகழ்ச்சியாக "அன்புடன் கௌதமி "என்ற சிறப்பு நிகழ்ச்சியை அன்னையர் தினத்தில் ஒளிபரப்ப உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டு சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவாதிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.