தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொடர்ந்து வித்தியாசமான பட தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் ஜிவிஎம்

கௌதம் மேனன், சூர்யா இணைந்துள்ள நவரசா ஆந்தாலஜி படத்திற்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டார் கம்பி மேலே நின்று
கிட்டார் கம்பி மேலே நின்று

By

Published : Jul 3, 2021, 4:28 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாகச் சின்ன நடிகர்கள் தொடங்கி பெரிய நடிகர்களின் படங்கள் வரை அனைத்து படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இதனால் பலரும் தாங்கள் இயக்கும் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடாமல், ஓடிடி தளங்களில் வெளியிடுவதை விரும்பத் தொடங்கி விட்டனர்.

அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஓடிடி தளங்களில் வெளியாகும் ஆந்தாலஜி படங்களின் மவுசு அதிகரித்து உள்ளது. அந்தவகையில் தற்போது, தமிழில் 9 இயக்குநர்கள் இணைந்து நவரசா ஆந்தாலஜி படத்தை இயக்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சூர்யாவை வைத்து இயக்குநர் கௌதம் மேனன் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில், அப்படத்திற்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' என வித்தியாசமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் தனது படங்களுக்கு வித்தியாசமாகத் தலைப்பு வைக்கும் கௌதம், இந்த படத்திலும் அதை விடாமல் கையாண்டு உள்ளார்.

கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் இயக்கும் இப்படம் கரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டான்ஸ் ஆடத் தயாரா? - வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் லேட்டஸ்ட் பாடல்

ABOUT THE AUTHOR

...view details