தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தடையை மீறி பாடகி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன் -  கோவிந்த் வசந்தா - கோவிந்த் வசந்தா

தமிழ் படங்களில் பாடுவதற்கு டப்பிங் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டநிலையில் பாடகி சின்மயிக்கு மீண்டும் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவிந்த் வசந்தா

By

Published : Mar 25, 2019, 11:49 PM IST

தனது மெல்லிசையான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகி சின்மயி. 96 படத்தில் இவர் பாடிய காதலே காதலே பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. படம் ரிலீஸ் ஆகி வெற்றியடைந்த பின்னும் இளைஞர்களின் காதல் ரிங்டோனாக ஒலித்திக் கொண்டிருக்கிறது. மேலும், பாடகி சின்மயி தமிழ் சினிமாவின் மூத்த கவிஞர் வைரமுத்து மீதும் நடிகர் ராதாரவி மீதும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தார்.

இதனால், சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு படங்களில் பாடுவதற்கு டப்பிங் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.கடந்த 6 மாதங்களாக எந்த படத்திலும் பாடல் வாய்ப்புகள் வழங்கப்படாததால் சோகத்தில் மூழ்கியிருந்தார்.

இந்நிலையில், '96' படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,'சின்மயி தான் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து பாடுவார் என்றும். அவராக வேண்டாம் என்று செல்லும் வரை அவர் பாடலாம்' என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, பதிலளிக்கும் வகையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் கோவிந்தாவின் பெயரை குறிப்பிட்டு 'இவர்தான் மனிதர்' என்று பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட சினிமா ரசிகர்கள் சின்மயிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details