பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் அவர் நடித்துவருகிறார்.
இப்படத்தில் லால், நடராஜன், யோகி பாபு, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது இந்த படத்தில் நடிகை கெளரி கிஷன் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இப்படத்தில் இணைந்திருப்பது குறித்து நினைக்கையில் மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.