தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல நடிகர்களான ராகவா லாரன்ஸ், நானி, இயக்குநர் கொரட்டலா சிவா ஆகியோர் மீது மீ டூ மூலம் பாலியல் புகார் அளித்தார். பாலியல் புகார் அளித்தது மட்டும் இல்லாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் டோலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரங்கள் பயத்தில் உறைந்திருந்தன. அடுத்து யாரை கூறுவார் என்ற அச்சமும் ஏற்பட்டது.
முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்ததால் ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனால் சென்னையில் குடியேறினார். அவ்வப்போது பாலியல் புகார்களை அளித்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது, தனது முகநூல் பக்கத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை பாராட்டி பேசியுள்ளார்.