தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பணத்தை கொள்ளையடிக்கும் சிம்பன்ஸி குரங்கு' - கொரில்லா ட்ரெய்லர் வெளியீடு! - சிம்பன்ஸி குரங்கு

ஜீவா நடிப்பில் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியிருக்கும் 'கொரில்லா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

gorilla trailer

By

Published : May 31, 2019, 9:25 PM IST

Updated : May 31, 2019, 10:52 PM IST

கீ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் கொரில்லா. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநர் டான் சாண்டி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. ஏனெனில், முதல் முறையாக சிம்பன்ஸி குரங்கு கொரில்லா படத்தில் நடித்துள்ளது. இது செய்யும் சேட்டைகள், குட்டீஸ்களுக்கு மிகவும் கவரும் என்று படக்குழு தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரில்லா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பணத்திற்காக வங்கியில் கொள்ளை அடிக்கும் ஜீவாவிற்கு, கொரில்லா குரங்கு உதவி செய்வதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. நாம தேடுகிற வாழ்க்கை கிடைக்கலன்னா... நம்ம தேடி வர வாழ்க்கைய நாம ஏன் தேர்ந்தெடுக்க கூடாது எனும் வசனத்தோடு ட்ரெய்லர் தொடங்குகிறது.

பின்னர் ஷாலினி பாண்டே உடன் காதல், பணத்திற்காக வங்கியை கொள்ளை அடிப்பது என்று வேகமெடுத்து, இறுதியில் யோகிபாபு காமெடியோடு துப்பாக்கி உடன் கொரில்லா நிற்பதோடு ட்ரெய்லர் முடிகிறது. இந்தப் படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று ட்ரெய்லர் சொல்கிறது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Last Updated : May 31, 2019, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details