நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இயக்கிவரும் திரைப்படம், 'குட்லக் சகி'. தில் ராஜூ தயாரிக்கும் இதில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் டீஸர் இன்று (ஆக.15) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'குட்லக் சகி' பட டீஸரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.