கே.டி. குஞ்சுமோன் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். நடிகர் சரத்குமார் தொடங்கி, இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.
பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டிய இவர், பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்துவந்தார்.
இந்நிலையில் கே.டி. குஞ்சுமோன் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அதிரடியான அறிவிப்புடன் செய்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.