தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா அழிய வேண்டி, கோ பூஜை நடத்திய சினிமா தயாரிப்பாளர்! - தயாரிப்பாளர் நடத்திய கோ பூஜை

திரைப்பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் கரோனா வைரஸை ஒழிக்க வேண்டி கோ பூஜை நடத்தியுள்ளார்.

Go" Pooja to destroy Corona
Go" Pooja to destroy Corona

By

Published : Jun 27, 2020, 7:26 AM IST

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் கரோனா வைரஸை ஒழிக்க வேண்டி கோ பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானமும், மருத்துவமும் கைக்கொடுக்காத நேரத்தில் ஆன்மிகம் மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இந்தக் கோ பூஜையை நடத்தினோம். இந்தக் கோ பூஜை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருந்துவாழ் மலையில் நடைபெற்றது.

பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் வாசம்செய்கிறார்கள் என்பதால் பசுவை சாந்தப்படுத்தும் நிகழ்வாக இந்தப் பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் சுமார் 150 பசுக்களுக்கு நீராட்டி புல் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

11 சுமங்கலிப் பெண்களும் இந்தப் பூஜையில் கலந்துகொண்டனர்.

பூஜையில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. நாட்டில் நிலவும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பயத்துடனும், பதற்றத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். கரோனா தொற்றால் மக்கள் இறந்தால் கூட ஒருவர் கூட பசியால் இழக்கக் கூடாது என்பதே என்னுடைய கருத்து.

மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம் தேவை. சிறு தொழில், குறு தொழில், விவசாயம் செய்பவர்கள் மூச்சுத் திணறும் அளவுக்கு வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கடலூரில் இரண்டு தீட்சிதர் உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details