தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே கனவு..!’ - அக்சரா ரெட்டி - etv bharat

சென்னை: "உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே தனது கனவு" என்று, ‘மிஸ் சூப்பர் குளோப் 2019’ போட்டியில் வெற்றி பெற்ற அக்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

அக்சரா ரெட்டி

By

Published : May 5, 2019, 12:26 AM IST

‘மிஸ் சூப்பர் குளோப் 2019’ போட்டியில் வெற்றி பெற்ற அழகி அக்சரா ரெட்டி, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவை உலகளவில் நான் பிரதிநிதித்துவம் செய்து, பெருமை சேர்த்திட வேண்டும் என்பதே என் கனவு. அது நனவாகி வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019 போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் 22 பேர்தான் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இதில் வெற்றிப் பெற்ற எனக்கு வெற்றிக்கான கிரீடம் வழங்கினர். அக்டோபர் மாதம், துபாயில் நடக்க உள்ள உலக அழகி போட்டியில் மொத்தம் 45 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறேன்” என்றார்.


செய்தியாளர் சந்திப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பொள்ளாச்சி போன்ற விவாகரத்தில் ஏன் இன்னும் குற்றவாளிகளை விட்டு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதா என்ற கேள்விக்கு, "நான் ஏற்கனவே மலேசியா தமிழ் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க விருப்பம் உள்ளது. தன்னை கவர்ந்த பெண் அரசியல்வாதி ஜெயலலிதா தான்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details