குழந்தைகளுக்கு பெரியவர்களின் குரல் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த ஃப்ளிப்கார்ட் விளம்பரத்தைப் பார்த்த உத்வேகமடைந்த கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ருர், அதுபோன்று திரைப்படத்தில் முயற்சி செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார். அதன் விளைவாக ‘கிர்மிட்’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 4ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
280 குழந்தை நட்சத்திரங்கள் - கேஜிஎப் இசையமைப்பாளரின் ’Girmit’ - கேஜிஎப்
கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் 280 குழந்தைகளை வைத்து ’Girmit’ (கிர்மிட்) எனும் படத்தை இயக்கியுள்ளார்.
Girmit
சகா சாலிக்ரமா, அஷ்லெஷ் ராஜ், தனிஷா கோனி, அராத்யா ஷெட்டி ஆகிய குழந்தைகள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தை ஓம்கார் மூவிஸ் தயாரிக்கிறது. இதனை 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் ‘கிர்மிட்’, இந்தி மற்றும் தெலுங்கில் ‘பக்கா மாஸ்’, தமிழ் மற்றும் மலையாளத்தில் ‘பொடி மாஸ்’ ஆகிய பெயர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமையை பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் பெற்றுள்ளார்.