தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராட்சசனுக்காக' விருது பெற்ற ஜிப்ரான் - ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது

'ராட்சசன்' திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்றுள்ளார்.

ghibran
ghibran

By

Published : Dec 7, 2019, 1:23 PM IST

விஷ்ணு விஷால்-முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ராட்சசன். அமலாபால், காளி வெங்கட், முனிஷ்காந்த், அபிராமி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து பின்னணி இசையில் மிரட்டியிருந்தார். படத்தின் ஒவ்வொரு நிமிடக் காட்சியிலும், திகிலூட்டும் வகையில் இசை அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் பலமாக அமைந்தது.

ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது வென்ற ராட்சசன்

இந்தப்படம் தற்போது கிழக்கு ஐரோப்பாவின் போலந்து நாட்டின் வார்சாவா நகரில் நடைபெற்ற ஃபியூஷன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து சர்வதேச அரங்கில் தமது படத்தை அரங்கேற்றியதற்காக இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ராம்குமார், 'வாழ்த்துக்கள் ஜிப்ரான் அய்யா' என மகிழ்ச்சி பொங்க ட்வீட் செய்துள்ளாார். இதனை மேற்கோள்காட்டி, 'உங்களால் நான்' என ஜிப்ரான் ரீ ட்வீட் செய்துள்ளார்.

இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க...

‘மராகேஷ்’ திரைப்பட விழாவில் மகுடம் சூடிய பிரியங்கா சோப்ரா

ABOUT THE AUTHOR

...view details