தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இனவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பும் நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் நிதி உதவி

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து இனவெறிக்கு எதிரான செயல்களில் களமிறங்கியுள்ள நிக் ஜோனஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தனியார் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளார்

நிக் ஜோனஸ்
நிக் ஜோனஸ்

By

Published : Jun 4, 2020, 3:14 PM IST

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் அடக்குமுறையால் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், இனவாதத்துக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுப்பியும், அந்நாடு முழுவதும் சில நாள்களாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்கள் தொடங்கி தங்கள் கண்டன குரல்களைப் பதிவு செய்துவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பாப் பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோனஸ், உருக்கமான பதிவு ஒன்றை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

”என் இதயம் கனத்துள்ளது. அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. தெளிவாய் கட்டமைக்கப்பட்ட இனவெறி, மதவெறி ஆகியவை நீண்ட தூரம் வளர்ந்துவிட்டன. இதற்கு மேலும் அமைதியாக இருப்பது அதனை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தொடரவும் அனுமதிக்கும்” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

”நாம் செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இனவாதத்தை ஆதரிக்கவில்லை எனச் சொல்வது இன்றைக்குப் போதாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இனவெறிக்கு எதிரான செயல்பாடுகளிலும், கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும் களமிறங்குவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான முதல் அடியை எடுத்துவைக்கும் விதத்தில், தானும் தனது மனைவி பிரியங்கா சோப்ராவும் இரு வேறு தனியார் அமைப்புகளுக்கு உதவித் தொகை அளித்துள்ளதாகத் தெரிவித்து, ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நிக் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க :நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் ஜெனிஃபர் ஆனிஸ்டன்

ABOUT THE AUTHOR

...view details