சென்னை:தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட படம் 'ஜென்டில்மேன்2'. இவர் தனது ஜென்டில்மேன், காதலன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தற்போது
'ஜென்டில்மேன் 2 ' என்ற பிரமாண்டப் படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே இப்படத்தின் இசையமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார். கடந்த இரண்டு நாள்களாக திரை உலகிலும் சமூக வலை தளங்களிலும் இப்படத்தின் கதாநாயகி யார்? நயன்தாராவா? என்று கேள்வி பரவி வந்தது. தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கதாநாயகியின் பெயரை அறிவித்துள்ளார்.
ரஜினி, மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்ற கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி தான், அந்த அறிமுக கதாநாயகி. இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
‘ஜென்டில்மேன் 2’ படத்தின் கதாநாயகி நயன்தாரா சக்ரவர்த்தி இந்நிலையில், மற்றொரு கதாநாயகி யார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் படத்தின் இயக்குநர், கதாநாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மேஜிக்கல் ரியலிஷம்... குதிரைவால் திரைப்பட இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்...