இந்தியில் 2003ஆம் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'துஜே மேரி கசம்'. மலையாளத்தில் வெளியான 'நிறம்' திரைப்படத்தின் ரீமேக்கான இந்தி படத்தில் ஜெனிலியாவும், அவருக்கு ஜோடியாக நடிகரும் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் அறிமுகமாகினர். காதல் படமான ’துஜே மேரி கசம்’ அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜனவரி 3ஆம் தேதி வெளியான அந்தத் திரைப்படம் ரிலீசாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திரையில் காதலர்களாக வலம் வந்து பிற்பாடு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெனிலியாவும் ரித்தேஷும் தங்களது சமூக வலைதளங்களில் படத்தின் ரிலீஸ் தேதியில் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.