தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த ஜெனிலியா - உடல் உறுப்பு தானம் ஜெனிலியா

நடிகை ஜெனிலியா தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.

ஜெனிலியா
ஜெனிலியா

By

Published : Jul 2, 2020, 5:50 PM IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு, ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர்.

இது குறித்து ஜெனிலியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும், எனது கணவரும் உடல் உறுப்பு தானம் குறித்து நீண்ட நாட்களாகவே யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்கு நேரம் அமையவில்லை.

ஜெனிலியா வெளியிட்ட ட்விட்டர் பதிவு

மருத்துவர் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளோம். அடுத்தவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு, வாழ்க்கை பரிசுதான். நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை கலாய்த்த கஸ்தூரி!

ABOUT THE AUTHOR

...view details