'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், பிரபு தேவாவை வைத்து இயக்கும் படம் 'பகீரா'. இப்படம் காதல் திரில்லர் கதைகளத்தில் உருவாக உள்ளது
'பகீரா' பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் 'சூப்பர் டீலக்ஸ் ஜோதி' - பகீரா பிரபு தேவா
பிரபு தேவா நடிப்பில் உருவாக உள்ள 'பகீரா' படத்தில் விஜய்சேதுபதி பட நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பிரபு தேவா, மொட்டை அடித்துக் கொண்டு, மூன்று கண்கள் கொண்ட ஆரஞ்சு நிற கண்ணாடி அணிந்து கோபமாக நின்று கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி போஸ்டரில், NO MORE VALENTINE'S DAY என்றும் பிரபு தேவாவின் முகத்தில் இருந்து ரத்தமும் வழிந்து கொண்டு இருக்கிறது. மர்மங்கள் நிறைந்த இப்போஸ்டர், படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைத்திருந்தது.
தற்போது இப்படத்தில் நடிகை காயத்திரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ள இப்படத்தில் சமீபத்தில் அமிரா தஸ்தூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.