நடிகையாக இருந்து நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் 'தலைவி' படத்தில் நடன இயக்குநராக பணியாற்றிவருகிறார். முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துவருகிறார்.
ஜெயலலிதா சிறு வயதில் ஒரு பரத கலைஞராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர். அதை அப்படியே மக்கள் முன் காட்ட வேண்டாம் என்பதற்காக படக்குழு கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றுவது குறித்து காயத்ரி ரகுராம் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு கங்கனா ரனாவத், என்னிடம் முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவர் இசையில் ஏற்கனவே நான் 'மதராசபட்டினம்' படத்தில் வெளியான, ’பூக்கள் பூக்கும் தருணம்’ பாடலுக்கு நடனம் அமைத்தேன்.
அது சிறப்பாக வந்திருந்தது. அதே போல் இப்படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தலைவி திரைப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக இருக்கும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு என் அம்மாவும், அப்பாவும் நடனம் கற்றுக்கொடுத்தனர். தற்போது நான் ஜெயலலிதா படத்திற்கு நடனம் அமைக்கிறேன். இப்படத்தில் பணிபுரிவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:சக்தி...சக்தி...சக்திமான் ஒளிப்பரப்பாகும் நேரத்தை அறிவித்த மத்திய அரசு!