மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இமானுவல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இதில் வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியான வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக மிஸ்கின் அறிவித்திருந்தார்.
விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளன. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாம் ‘துப்பறிவாளன் 2’ படக்குழு. இந்த படத்தில் கௌதமி, ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.