அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம், 'ஓ மை கடவுளே'. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்லும் வகையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தில் விஜய்சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது இதில் இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு கூறுகையில், 'ஓ மை கடவுளே' படத்தில் சில காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக் காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும், காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.