கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒன்ராகா என்டெர்டயின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் இருந்து வெளியான `மறுவார்த்தை பேசாதே’ `விசிறி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பும் முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.