'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் படம் 'ஜோஷ்வா'. இந்தப்படத்தில் ஒரு நாள் இரவில், போகன், எல்கேஜி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில், வருணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராஹெய் நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கூடவே இப்படம் வரும் 2020 காதலர் தினத்தன்று வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
படத்தின் கூடுதல் விவரங்கள் மற்றும் டீசர் உள்ளிட்டவை பற்றி விரைவில் அறிவிப்பதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.