தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிச்சைகாரன்' இயக்குநருக்கு 'பச்சை' சிக்னல்: கெளதம் மேனனுக்கு மீண்டும் 'சிவப்பு' சிக்னல் - சித்தார்த்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ENPT

By

Published : Sep 5, 2019, 1:10 PM IST

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், சுனைனா, ராணா டகுபதி, சதீஷ் கிருஷ்ணன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டே படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போனது. இதற்கிடையே படத்தின் பல்வேறு புகைப்படங்கள், போஸ்டர்கள், டீஸர், சிங்கிள் டிராக் பாடல்கள் என அவ்வப்போது வெளியிடப்பட்டன.

சமீபத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 6ஆம் தேதி படம் வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்தனர்.

தற்போது படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சில கடன்கள் நிலுவையில் இருப்பதால் அதனை தீர்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், பிரச்னைகள் இன்றே தீர்க்கப்பட்டால் படம் நாளை வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிச்சைக்காரன் பட இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் நாளை அறிவிக்கப்பட்ட படி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details