தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனை நோக்கி பாயும் தோட்டா அடுத்த பாடல் 'மறுவார்த்தை பேசாமல்' வெளியீடு - மேகா ஆகாஷ்

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய பாடல் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

enpt

By

Published : Aug 27, 2019, 8:47 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இ்ந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், சுனைனா, ராணா டகுபதி, சதீஷ் கிருஷ்ணன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டே படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போனது. இதற்கிடையே படத்தின் பல்வேறு புகைப்படங்கள், போஸ்டர்கள், டீஸர், சிங்கிள் டிராக் பாடல்கள் என அவ்வப்போது வெளியிடப்பட்டன.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ட்ரெய்லரை சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ள படக்குழு புதிய ரிலீஸ் தேதியாக செப்டம்பர் 6ஐ அறிவித்துள்ளது.

இதற்கிடையே, படத்தின் சிங்கிள் டிராக் பாடலாக 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடலை வெளியிட்டு, படத்தின் இசையமைப்பாளர் மிஸ்டர். எக்ஸ் எனக் குறிப்பிட்டு அதுபற்றி ரகசியம் காத்து வந்தனர். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று அறிவித்தனர்.

இந்நிலையில், படத்தின் புதிய பாடலான திருடாதே திருடாதே பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலும் தற்போது இணையத்தை கலக்க ஆரம்பித்துவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details