தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கௌதம் மேனன் செய்யும் 'எஃப்ஐஆர்' - விஷ்ணு விஷால் ராட்சசன்

விஷ்ணு விஷால் நடிக்கும் 'FIR' திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

gautham
gautham

By

Published : Dec 28, 2019, 1:57 PM IST

நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் படம் 'FIR ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்'.

இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்கிறார்.

சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்திற்கு பிறகு நடிக்கும் இந்தப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், முக்கிய கதாபாத்தரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார்.

கௌதம் மேனன்

கௌதம் மேனன் இதுவரை பல படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க...

'காஷ்மீரா பர்தேஷி' அசத்தல் புகைப்படத்தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details