தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதிர்ச்சி கொடுத்த பா.இரஞ்சித்: ஷாக்கான கெளதம் மேனன் - கெளதம் மேனனின் படங்கள்

கெதளம் மேனன் நடிப்பில் 'அன்புசெல்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

v
v

By

Published : Nov 3, 2021, 1:43 PM IST

வினோத் குமார் இயக்கத்தில், போலீஸ் அலுவலராக கெளதம் மேனன் நடிக்கும் படம் 'அன்புசெல்வன்'. இந்த பெயர் கெளதம் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயராகும்.

எனவே அன்பு செல்வன் 'காக்க காக்க' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவன்த் ஸ்டூடியோ சார்பில் மகேஷ் தயாரிக்கும் அன்பு செல்வன் படத்திற்கு சிவா பத்மாயன் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டரில் பதிவிட்டு கெளதம் மேனனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், கெளதம் மேனன் இந்த படத்தில் நான் நடிப்பது குறித்து எனக்கே தெரியாது என அதிர்ச்சி அளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து கெளதம் மேனன் தனது ட்விட்டரில், இது எனக்கு அதிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்கிறது. நான் நடிப்பதாக கூறப்படும் இந்த படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

கெளதம் மேனன் ட்வீட்

போஸ்டரில் இயக்குநரை எனக்கு தெரியவும் செய்யாது, அவரை நான் சந்தித்ததும் கிடையாது. தயாரிப்பாளரோ பெரிய ஆள்களை வைத்து ட்வீட் செய்திருக்கிறார். இது போன்ற செயலை எளிதில் செய்யலாம் என்பதை பார்க்கும் போது பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என ட்வீட் செய்துள்ளார்.இதையடுத்து விஷ்ணு விஷாலும் பா.ரஞ்சித்தும் அந்த ட்வீட்டை உடனடியாக நீக்கினர்.

தொடர்ந்து நெட்டிசன்கள் கெளதம் மேனன் தற்போது வரிசையாக படம் செய்து வருவதால், இதையும் அவர் ஒப்பந்தம் செய்திருப்பார். ஆனால் அதைப் பற்றி மறந்து போயிருப்பார். என்றும் பிரபலங்களின் சமூகவலைதளங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெற்றிமாறனின் 'விடுதலை': போலீஸாக நடிக்கும் கெளதம் மேனன்?

ABOUT THE AUTHOR

...view details