தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜிவியுடன் முதல் முறையாக கைகோர்த்த கெளதம்! - ஜிவி பிரகாஷின் புதியப்படம்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கெளதம் மேனன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

GVM
GVM

By

Published : May 22, 2020, 4:09 PM IST

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி, ஜி.வி பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். மாணவப் பருவத்தில் கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்னைகளை ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக தயாராகி வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தயாரித்து வந்த கே புரொடக்ஷன்ஸ் சில காரணங்களால் விலகியதையடுத்து 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துவருகிறார்.

தற்போது இவர்களுடன் ஸ்டைலிஷ் இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் - ஜிவி இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.

சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில் கௌதம் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதையடுத்து தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.இன்னும் பெயரிடாத இப்படத்திற்கு 'செல்ஃபி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details