தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி - துப்புரவு தொழிலாளர்களை சந்தித்த கௌதமி

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை கௌதமி துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்து பரிசுப்பொருள்களை வழங்கி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார்.

gautami
gautami

By

Published : Jan 1, 2020, 12:52 PM IST

தமிழ் திரையுலகில் 1980களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

திரைப்பயணம் தவிர்த்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமான 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். படத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை எனப் பல சிறப்புப் பயிற்சியையும் கவுன்சிலிங்கையும் வழங்கிவருகிறார்.

இந்நிலையில், கௌதமி 2020ஆம் ஆண்டின் தொடக்கமான புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவுத் தொழிலாளர்களை சந்தித்து பரிசுப் பொருள்களைக் கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது தொழிலாளர்களுடன் பேசிய கௌதமி, "அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்தக் கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும்" என்று கூறி அவர்களிடம் அன்பைப் பரிமாறிக்கொண்டார்.

துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த கௌதமி

மேலும், துப்புரவுத் தொழிலாளர்களுடன் தனது புத்தாண்டை தொடங்கியுள்ள கௌதமி, இந்தப் புத்தாண்டை துப்புரவுத் தொழிலாளர்களுடன் கொண்டாடுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க...

வயது முதிர்ந்த தோற்றத்தில் திலீப் எடுக்கும் புதிய அவதாரம்!

ABOUT THE AUTHOR

...view details