பிரபல இசை அமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களை எழுதியும் உள்ளார். கரகாட்டக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கங்கை அமரன் சில படங்களில் நடித்தும் உள்ளார்.
ஹரி படத்தில் இணைந்த கங்கை அமரன்! - hari movie
சென்னை: அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளார்.
கங்கை அமரன்
இந்நிலையில் இயக்குநர் ஹரி அருண் விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் ஜோசியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சண்டை காட்சிகள் இரவிலும், மற்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுவருகிறது.
இப்படத்தில் அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.