சென்னை:பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது ஒரு ரொமான்ஸ் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.
“உன் பார்வையில்” என்று பெயரிடப்பட்ட இப்படத்தினை Kaho na pyar hai, Pardes, Taal ஆகிய பாலிவுட் மெகாஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்தராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ரொமான்ஸ் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் மனநல நிபுணராகவும், பார்வதி நாயர் தொழிலதிபராகவும் நடிக்கிறார்கள். படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.