தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும், ராம்குமார் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் 'அசுரன்' அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
'சுள்ளான்' தனுஷுக்கு 'பிரேவ் ஹார்ட்ஸ்' வில்லன் - பிரேவ் ஹார்ட்ஸ்
தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது. தற்போது இப்படத்தில் வெளிநாட்டு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 'Brave hearts', 'Troys' போன்ற படங்களிலும் 'Games of Thrones' இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.