தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வில்லனுடன் ரொமான்ஸ் செய்யும் வொண்டர் வுமன்! - வொண்டர் வுமன் திரைப்படம்

நடிகை கால் கடோட் , 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

Gal Gadot
Gal Gadot

By

Published : Jun 1, 2020, 2:18 AM IST

ஹாலிவுட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வொண்டர் வுமன். இப்படத்தில் இரண்டாம் பாகமான 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் பாட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில், 'கால் கடோட்' முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கால் கடோட், சமீபத்தில் இப்படம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இந்தப் படத்தில் நீங்களும் வில்லனும் ரொமான்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கால் கடோட், "இதற்கு என்னால் முறையான பதிலை கூறமுடியாது. ஆனால், இரண்டு கதாபாத்திரத்திற்கும் இடையே ஒரு ஈர்ப்பு எப்போதும் நிலவும்" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு வெளியாகும் இப்படமானது, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details