டிசி காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமான 'வொண்டர் வுமன்' பாத்திரத்திற்கு ரசிகர்கள் பலரும் இருக்கின்றனர். அதுவும் திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தில் கேல் கடோட்டை ரசிப்பதற்காகவே ஒரு தனி பட்டாளம் உண்டு.
இவர் அண்மையில் நடித்த இந்தத் திரைப்படத்தின் நினைவாக வைத்திருக்கும் தலைக்கவசத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில் "பொதுவாக நான் நடித்த எந்தத் திரைப்படத்தின் நினைவையும் வீட்டில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் சிறப்பானது. அதனால்தான் இதை நான் காட்சிக்கு வைத்திருக்கிறேன். இந்தத் தலைக்கவசம், வலிமை, மரபு, நம்பிக்கை என்னும் மூன்றையும் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் கேல் கடோட் நடிப்பில் உருவான 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'வொண்டர் வுமன் 1984'