தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜி.வி.பிரகாஷின் ’செல்ஃபி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு! - kollywood news

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ’செல்ஃபி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

By

Published : Sep 12, 2021, 2:09 PM IST

வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் இயக்கியுள்ள படம் ’செல்ஃபி’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து நடித்துள்ளார். கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் இன்று (செப்.12) வெளியிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்

ஏற்கெனவே வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’ஜெயில்’ படம் திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வெளியீட்டுக்குத் தயாராக நிற்கும் கோலிவுட் படங்கள்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details