நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் 'பசங்க 2' , '36 வயதினிலே' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் 2டி என்டெர்டைன்மென்ட் நிறுவனம் ஆன்லைன் மூலமாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், 2டி நிறுவனம் பெயரில் போலியான மெயில் ஐடி மூலம், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து மோசடி நடைபெறுகிறது. நடிக்க விரும்புபவர்களின் மெயில் ஐடிக்கு 2டி நிறுவனம் புதிதாக தயாரிக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன், அபர்ணா முரளி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அழைப்பு விடுக்கின்றனர்.
தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே' உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் பொது மக்களும் நம்பி வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். மேலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி மெயில் அனுப்பபடுவதால் பொதுமக்கள் முழுவதுமாக நம்பியுள்ளனர்.